×
Saravana Stores

சிந்தலகுப்பம் பகுதியில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தல குப்பம் பகுதியில் அமைந்துள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை செங்குன்றம் செல்லும் கனரக லாரி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியின் முன்பகுதியில் சிக்கிய ஓட்டுனர் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையைச் சேர்ந்த வெங்கி(25) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிகிச்சைக்காக அவர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரியில் சுமார் 30 டன் எடை இருந்ததும், லாரியில் ஏற்றிச்செல்ல அரசு நிர்ணயித்த எடையைக் காட்டிலும் கூடுதல் எடை இருந்ததால் மேம்பாலத்தின் மீது செல்லும்போது லாரி இடது புறமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதன் பின்பு தேசிய நெடுஞ்சாலை துறையினர், ரோந்து போலீசாரின் உதவியுடன் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். கூடுதல் எடையுடன் வரும் வாகனங்களை சோதனைச் சாவடியில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகள் அனுமதிப்பதே இது போன்ற தொடர் விபத்துகளுக்கு காரணம் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.

The post சிந்தலகுப்பம் பகுதியில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thandalakupam ,Kummidipundi ,AP ,Sulurpet ,Chennai ,Chennai Kolkata National Highway ,Sindal Garbage Area ,Kummidipundi, Thiruvallur district ,Mindalakupam ,Dinakaran ,
× RELATED சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில் நடுவழியில் நிறுத்தம்