×

விகேபுரம் அருகே பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு

விகேபுரம், அக்.24: விகேபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தில் பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. விகேபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் லாமேக் கலைச்செல்வன்(60). இவர் அரசு பேருந்தில் டிரைவராக பணியாற்றி வேலையை இடையில் விட்டு விட்டதாக தெரிகிறது. கலைச்செல்வன் கடந்த 20 வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவரது பூட்டிய வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.

நேற்று காலை அவரது வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவரது மனைவி ஏஞ்சலின் லதா கொடுத்த புகாரின் பேரில் விகேபுரம் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விகேபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விகேபுரம் அருகே பூட்டிய வீட்டினுள் அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Sivantipuram ,Lamagh Kalaichelvan ,Sivanthipuram Kamaraj Street ,
× RELATED விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட...