×

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

பாலக்காடு, அக்.24: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அரசு மருத்துவக்லகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 15 ஆண்டுகள் வளர்ச்சியடைந்த சந்தன மரம் வளர்ந்து காணப்பட்டுள்ளது. சந்தன மரத்தின் சுற்றிலும் புதர் காடுகள் நிறைந்துள்ளது.

இதனால் மரம் யார் கண்ணுக்கும் அதிகமாக தெரியவில்லை. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கட்டர் உபயோகித்து வெட்டி இரவு நேரத்தில் கடத்தியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் மருத்துவமனை ஊழியர்கள் பார்த்தபோது, சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் அனில்ராஜ் கல்லூரி வளாகத்தில் இருந்து சந்தன மரம் திருட்டு நடந்தது குறித்து மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Government ,Medical ,College ,Hospital ,Palakkad ,Manjeri Government Medical College Hospital ,Malappuram district of ,Kerala ,Malappuram District ,Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...