- மேலூர் ஒன்றிய தி.மு.க
- ஊட்டி
- மேலூர் பஞ்சாயத்து
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- திமுக
- ஜனாதிபதி
- மு.கே ஸ்டாலின்
- நீலகிரி மாவட்டம்
- முபாரக்
- மேலூர் ஒன்றியம்…
- தின மலர்
ஊட்டி, டிச.30: மேலூர் ஒன்றிய திமுக மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடி முகவர்கள், உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் வழிகாட்டுதலின் படி மேலூர் ஒன்றிய திமுக சார்பில் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட 14 வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் தலைமை வகித்தார். குன்னூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் திராவிடமணி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தை ஒன்றிய அவை தலைவர் உமாபதி துவங்கி வைத்தார். வாக்கு சாவடி முகவர்கள், மற்றும் வாக்கு சாவடி உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொகுதி பார்வையாளர் எடுத்துரைத்தார். கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மேலூர் கிருஷ்ணன், மணியம்மாள், மயில்வாகனம், அன்பழன், பாலசுப்பிரமணி, மோகன், கோகுலம், முருகேஷ், வாக்குசாவடி முகவர்கள், வாக்குச்சாவடி உறுப்பினர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முருகேஷ் நன்றி உரை ஆற்றினார்.
The post மேலூர் ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர் கூட்டம் appeared first on Dinakaran.