பாலக்காடு, டிச.28: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வட்டம்குளம் கிராமப்பஞ்சாயத்து சுற்று வட்டாரப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். இவைகள் கூட்டத்துடன் வட்டம்குளம் கிராமப்பஞ்சாயத்து இடங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெல், வாழை, சேனை, சேம்பு, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ருசித்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.
மேலும், சாலைகளில் கூட்டத்துடன் குறுக்கே கடந்து செல்வதால் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவற்றை பிடித்துக் கொல்லுமாறு ஊர்மக்கள் வனத்துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏக்கர் கணக்கிற்கு நெல் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் ஊர்மக்கள் தனியாக சாலைகளில் நடமாட முடியாத அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் எம்.ஏ.நஜீபின் தலைமையில் வேட்டைக்காரர் ஒருவரை தயார்ப்படுத்தி 60க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லப்பட்டன. இந்த சம்பவத்தால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வருகின்ற சில நாட்களில் காட்டுப்பன்றிகளின் வேட்டை நடைபெறும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கப்பட்டது.
The post மலப்புரம் அருகே 60க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் வனத்துறை அனுமதியுடன் சுட்டுக் கொல்லப்பட்டன appeared first on Dinakaran.