×

அதிமுக, பாஜகவை கிண்டல் அடித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

 

ஊட்டி, ஜன.1: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தை அரசியலாக்கி வரும் அதிமுக, பாஜகவை கண்டிக்கும் விதமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் பகுதியில் தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் மாணவிகள் பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் படங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் அதில் ‘மாதம் 1000 கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது, பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பய மூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது, சேவ் கேல்ஸ் எஜிகேசன்’ என ஆங்கிலத்தில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் கூடும் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.குன்னூர் நகர பகுதியில் அதிமுக, பாஜகவை கண்டிக்கும் விதமாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

The post அதிமுக, பாஜகவை கிண்டல் அடித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Ooty ,Tamil Nadu Students' Association ,Girls' Wing ,Ooty Nagar ,Nilgiris district ,Anna University ,Chennai ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அதிமுக, பாஜவினர் கைது