பாலக்காடு, டிச.31: ஒத்தப்பாலம் அருகே சுனங்காடு பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கலால்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒத்தப்பாலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஒத்தப்பாலம் ரேஞ்சு இன்ஸ்பெக்டர் பிரேமானந்த குமார் தலைமையில் கலால்துறை காவலர்கள் ஒத்தப்பாலம் சுனங்காடு வாய்க்கால் பகுதியில் பரிசோதனை நடத்தினர்.
அப்போது சுனங்காடு வாய்க்கால் வரப்பில் உள்ள புதர் காட்டு பகுதியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்டு மூன்று நீலநிற கேன்களில் மொத்தம் 600 லிட்டர் ஊறல்களை மர்ம நபர்கள் புதைத்து பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து நாசப்படுத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post ஒத்தப்பாலம் அருகே 600 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் appeared first on Dinakaran.