×

பக்கானா பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு

 

பந்தலூர், ஜன.1: பந்தலூர் அருகே பக்கனா அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் இப்ராஹிம் பாதுஷா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், சௌகத் அலி, சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் மாணவர்களின் உணவு பழக்கம், விரைவு உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள், உடற்பயிற்சி முறைகள், ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் தீபா, அனிதா, நதியா, சசிகலா, அப்சல், யூனஸ் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பக்கானா பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Pakana School ,Pandalur ,Pakana Government High School ,National Consumer Day ,Gudalur Consumer Human Resource Environment Protection Center ,School Citizens Consumer Forum ,Dinakaran ,
× RELATED புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க...