×
Saravana Stores

அயர்ன் பாக்ஸ் பெற விண்ணப்பிக்க அழைப்பு

சேலம், அக்.23: சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விலையில்லா பித்தளை அயர்ன் பாக்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், விலையில்லா பித்தளை அயர்ன் பாக்ஸ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற சேலம் மாவட்டத்தை சேர்ந்த, சேலம் மாவட்டத்திலேயே வசிப்பவராக இருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ₹72,000-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 45 வயது வரை உள்ள இந்து-புதிரை வண்ணார் அல்லது ஆதிதிராவிடர் இனத்தினை சார்ந்தவராக இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட விஏஓ-விடம் சலவை தொழில் புரிதலுக்கான சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள், இச்சான்றுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் இருப்பிட சான்று நகலுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறை எண்.109-ல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post அயர்ன் பாக்ஸ் பெற விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Adi Dravidar ,Tribal Welfare Department ,Salem district ,Brindadevi ,Dinakaran ,
× RELATED ஆதி திராவிடர், பழங்குடியினர் புகார்...