×

காஞ்சி மண்டல கபடி போட்டி திருமலை பொறியியல் கல்லூரி சாம்பியன்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டல அளவிலான கபடி போட்டியில் திருமலை பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், காஞ்சிபுரம் மண்டல அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கபடி போட்டி காஞ்சிபுரம் அடுத்த ஊவேரி பி.டி.லீ பொறியியல் கல்லுாரி விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், 15 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இக்கல்லூரி கபடி அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற கபடி அணியினரை கல்லுாரி நிர்வாக இயக்குநர்கள், கல்லூரி முதல்வர் விஜயபாஸ்கர், உடற்கல்வி இயக்குநர் செல்வராஜ், பேராசிரியர்கள், மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post காஞ்சி மண்டல கபடி போட்டி திருமலை பொறியியல் கல்லூரி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Kanchi Zone Kabaddi Tournament ,Tirumala ,Engineering College ,Kanchipuram ,Tirumala Engineering College ,zone ,kabaddi ,Chennai Anna University ,Uveri B.D.Lee Engineering ,Dinakaran ,
× RELATED திருமலையில் கடும் பனிமூட்டம் கடும்...