×

குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

செங்கல்பட்டு: குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு விரக்தியில் இருந்த கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மறைமலைநகர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (46). இவர் மறைமலை நகரில் உள்ள ஒரு கேட்டீனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வி (45) என்ற மனைவி உள்ளார். இதில், நாராயணன் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எப்போதும் போல மீண்டும் சண்டை ஏற்பட்டு இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்த நாராயணன் பூச்சி மருந்தை குடித்துள்ளார். பூச்சி மருந்தை குடித்ததால் அளவுக்கதிகமாக வாந்தி பேதி ஆகியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியோடு நாராயணனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாராயணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Narayanan ,Kadambur village ,Maraimalainagar ,Maraimalainagar… ,
× RELATED செங்கல்பட்டு நகர பாஜ தலைவர் பொறுப்பேற்பு