×

கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்பு

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். பசுமாடு வளர்த்து வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு சென்ற, இவரது பசுமாடு இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், லட்சுமணனின் பசுமாடு, மொளச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரேயுள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் உதவியுடன் கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தி, கயிறு கட்டி கழிவுநீர் கால்வாயில் இருந்து பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். சுமார், 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி, கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Lakshmanan ,Molachur ,Sunguvarchatram ,Subramania ,Swamy Temple… ,Dinakaran ,
× RELATED செரப்பணஞ்சேரி ஊராட்சியில்...