சேலம், அக்.17: பருவமழையையொட்டி சேலம் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு ஓடை, மழைநீர் கால்வாய்களில் தூர் வாரும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையையொட்டி, சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் தூர்வாரும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அஸ்தம்பட்டி மண்டலம் டி.வி.எஸ் ஓடை, குறிஞ்சி நகர் ராஜவாய்க்கால் ஓடைகளில் தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும், அம்மாபேட்டை சீலாவரி ஏரி, 50 அடி ஓடை, கொண்டலாம்பட்டி ஓடைகளில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே மாநகராட்சியில் 4 மண்டலங்களில், சாக்கடை கால்வாய்களில் தூர் வாரும் பணியில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். 41வதுவார்டு பாவடி ஆண்கள்பள்ளி பின்புறம்உள்ள ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியதால், அடைப்பு ஏற்பட்டது. அதனை நேற்று பொக்லைன் மூலம் அள்ளி சாலையில் போடப்பட்டது.
The post ஓடை, கால்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.