×

காரைக்கால் தெற்கு தொகுதி, திருபட்டினத்தில் பெண் குழந்தைகளுக்கு முதல்வரின் ₹.50 ஆயிரம் பைப்பு நிதி ஆணை

 

காரைக்கால், அக்.10: காரைக்கால் தெற்குத்தொகுதி மற்றும் திருபட்டினத்தில் பெண் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதிக்கான ஆணையை எம்எல்ஏ நாஜிம், எம்எல்ஏ நாகதியாகராஜன் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் வழங்கினர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு முதலமைச்சரின் கேர் திட்டம் – 2023 இத்திட்டமானது புதியதாக பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக வங்கிக் கணக்கில் புதுச்சேரி அரசு முதலமைச்சரின் கேர் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதன் முதல் கட்டமாக தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 21 பயனாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் நேற்று வழங்கினார். புதுச்சேரியில் உள்ள ஒரு தபால் அலுவலகம் / பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் பெண் குழந்தையின் பெயரில் ₹ 50,000 டெபாசிட் செய்யப்படும்.அதில் பெற்றோர் / பாதுகாவலர் ஒருவர் தனிப்பட்ட சேமிப்பு / நடப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

17-03-2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையவர். இந்நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் (பொ) காஞ்சனா உடன் இருந்தார்.
திரு.பட்டினத்தில் 22 பயனாளிகள்:இதேபோல் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த 22 பயனாளர்களுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் பெண் குழந்தைகளின் வைப்பு நிதிக்கான ஆணையை வழங்கினார். புதுச்சேரியில் உள்ள ஒரு தபால் அலுவலகம் / பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் பெண் குழந்தையின் பெயரில் ₹ 50,000 டெபாசிட் செய்யப்படும். அதில் பெற்றோர் / பாதுகாவலர் ஒருவர் தனிப்பட்ட சேமிப்பு / நடப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் (பொறுப்பு) அதிகாரி காஞ்சனா கலந்து கொண்டார்.

The post காரைக்கால் தெற்கு தொகுதி, திருபட்டினத்தில் பெண் குழந்தைகளுக்கு முதல்வரின் ₹.50 ஆயிரம் பைப்பு நிதி ஆணை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Karaikal South Constituency ,Thirupattinam ,Karaikal ,MLA ,Nazim ,Nagathiagarajan ,Karaikal South Block ,Tirupatnam ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...