×
Saravana Stores

தேசிய அளவிலான கருத்தரங்கம்

ஓமலூர், அக்.10: சேலம் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நானோ படிகங்கள், சாதனங்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
வேதியியல் மற்றும் இயற்பியல் துறையின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு, கல்லூரி தாளாளர் சத்தியமூர்த்தி, செயலாளர் துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி இயக்குனர் இசைவாணி சத்தியமூர்த்தி குத்து விளக்கேற்றினார். கல்லூரி முதல்வர் ஹரி கிருஷ்ணராஜ், நிர்வாக அலுவலர் முத்துக்குமார், துறைத் தலைவர்கள் ஜெயகோபி, தேர்வு கண்காணிப்பாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கோவை காருண்யா பல்கலைக்கழக இணை பேராசிரியர் மாது, எஸ்.எஸ்.என் நிறுவனத்தின் விஞ்ஞானி முத்து, செந்தில் பாண்டியன் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நானோ படிகங்கள், சாதனங்கள் என்னும் தலைப்பில் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். வேதியியல் மற்றும் இயற்பியல் துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

The post தேசிய அளவிலான கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Salem Padmavani College of Arts and Sciences for Women ,Department of Chemistry and Physics, ,College Principal ,Sathyamurthy ,Dinakaran ,
× RELATED ஓமலூர் அருகே 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு...