- சேலம்
- மாஜி எம்.எல்.ஏ.
- காங்கோ இளைஞர் கவுன்சில்
- கார்வேந்தன்
- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
- சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம்
சேலம், அக்.10: கொங்கு இளைஞர் பேரவையின் பெயரை சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதாக, மாஜி எம்எல்ஏ தனியரசு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் கார்வேந்தன் மற்றும் நிர்வாகிகள், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து கார்வேந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை, கடந்த 2016ம் ஆண்டு முதல் முறையாக பதிவு செய்து நடத்தி வருகிறேன். தற்போது பேரவையில் இல்லாத முன்னாள் எம்எல்ஏ தனியரசு, இயக்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார். மேலும், சட்டவிரோத செயல்களுக்கும் அமைப்பின் பெயரை பயன்படுத்தி, இயக்கத்தின் நன்மதிப்பை கெடுத்து வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே காவல்துறை, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததன் பேரில், இயக்கத்தின் பெயரை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனையும் மீறி அவர், தவறாக பயன்படுத்தி வருகிறார். எனவே, இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
The post சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.