தேன்கனிக்கோட்டை, அக்.1: தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஆலள்ளி வனப்பகுதியில், 2 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. அதேபோல், தோட்டத்தில் உள்ள குடிநீர் குழாய்களையும் மிதித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து, தாரை தப்பட்டை அடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். விளைபயிர்களை யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பயிர்களை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.