×
Saravana Stores

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

தேன்கனிக்கோட்டை, அக்.23: தேன்கனிகோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காடு பகுதி சாலைகள், மற்றும் உட்புறங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் மது அருந்துபவர்கள் போட்டு செல்லும் பிளாஸ்டிக் கவர்கள், கண்ணாடி பாட்டில்கள், குப்பைகளை வன உழியர்களைக் கொண்டு, சுற்றுச்சூழை பாதுகாக்கும் வகையில் அகற்றினர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலையோரம், வன பகுதிகளில் உள்ளே தின்பண்ட கவர்களை வீசுவதால், அந்த கவர்களை வன விலகுகள் உண்பதால் கர்ப்பபை, இறப்பை பாதிப்பும், மேலும் விலங்குகள் இறப்பதற்க்கும் நேரிடலாம். ஆதலால் பொதுமக்கள் காட்டு பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்களை போட வேண்டாம் என்றும், குரங்குகளுக்கு பாலதீன் பைகளில் தின்பண்டங்களை கொடுக்க கூடாது என்று பொது மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

The post பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Nokanur reserve forest ,Dhenkanikottai forest ,Dinakaran ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் ஆனந்த...