- விவசாயிகளின் குறைக் கூட்டம்
- காஞ்சிபுரம்
- மாவட்ட கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- கலெக்டர்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறைச்சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி 3 சதவீதம் வட்டி தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.153 லட்சம் மதிப்பிலான கடன்தொகையும், களக்காட்டூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.5,44,657 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், விப்பேடு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,80 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன்களும், வேளாண் சேவை மையம் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.40,11,192 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் கதிர் அறுக்கும் இயந்திரங்களையும், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் 3 விவசாய பயனாளிகளுக்கு 5 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான மாடித்தோட்ட கிட், மண்புழு உர படுக்கை, நேரடி நெல் விதைப்பு கருவி போன்ற வேளாண் இடுப்பொருட்களும், விதைச்சான்று மற்றும் உயிர்ம சான்று துறை சார்பில் 1 விவாய பயனாளிக்கு இயற்கை வேளாண்மைக்கான உயிர்ம சான்றினையும் கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ராஜ்குமார், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.