×

பூதத்தாழ்வார் உற்சவம் மாமல்லபுரத்தில் இன்று தேர் வீதியுலா

 

மாமல்லபுரம், நவ. 8: மாமல்லபுரம், தலசயன பெருமாள் கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயிலில், ஆண்டுதோறும் பூதத்தாழ்வார் உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கோயிலில் திருப்பணி நடந்ததால், உற்சவம் நடைபெறாமல் இருந்தது. தற்போது, திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 1ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில், 10 நாட்கள் நடைபெறும் பூதத்தாழ்வார் உற்சவம் கடந்த 31ம் தேதி தொடங்கியது. தினமும், பூதத்தாழ்வாருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இந்நிலையில், உற்சவத்தின் முக்கிய விழாவான திருத்தேர் வீதியுலா இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மீக பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்காக, தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post பூதத்தாழ்வார் உற்சவம் மாமல்லபுரத்தில் இன்று தேர் வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Chariot ,Mamallapuram ,Bhuthathalwar Utsavam ,Mamallapuram, ,Thalasayana Perumal Temple ,Chariot Veedhiula ,Bhoothathalwar Utsavam ,
× RELATED மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை..!!