×

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டிகளில் வெற்றி மாணவ – மாணவிகளுக்கு பரிசு: கலெக்டர் வழங்கினார்

 

செங்கல்பட்டு, நவ.8: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், கலைஞர் ஆகியோர்களின் பிறந்தநாள் முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2,000, சிறப்பு பரிசு ரூ.2,000 ஆகிய பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

உடன், மாவட்ட கல்வி அலுவலர்கள், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பாரதி மற்றும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள் உள்ளனர். இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த திறமையை பாராட்டி 12 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டிகளில் வெற்றி மாணவ – மாணவிகளுக்கு பரிசு: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Department of Tamil Development ,Chengalpattu ,Tamil Development Department ,Chengalpattu District Collector ,Office ,Anna ,Annal Ambedkar ,Dinakaran ,
× RELATED வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க...