×

காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் 2 தொழிலாளிகள் பலி

காஞ்சிபுரம், நவ. 10: காஞ்சிபுரம் அடுத்த ஒழக்கோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (55). இவர், சொந்த வேலையாக நேற்று முன்தினம் காஞ்சிபுரத்திற்கு சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வீடு திரும்பினார். அப்போது, கூரம் கேட் அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மூர்த்தி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மூர்த்தி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிசிக்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து
காஞ்சிபுரம் புத்தேரி பாக்குபேட்டை தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி எல்லப்பன் (55). இவர், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் தன்னுடைய சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். ஏகாம்பரநாதர் கோயில் சந்திப்பு அருகே சென்றபோது, தனியார் கல்லூரி பேருந்து எல்லப்பன் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் 2 தொழிலாளிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Murthy ,Okhakolpattu ,Cooram Gate ,Dinakaran ,
× RELATED மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய...