×

வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமிபூஜை

மதுராந்தகம், நவ.10: வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ₹12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணியினை எம்எல்ஏ மரகதம் குமரவேல் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த, ரேஷன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, இக்கட்டிடம் பழதடைந்துள்ளதால், அதனை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில், எம்எல்ஏ மரகதம் குமரவேல் கலந்துகொண்டு, புதிய ரேஷன் கடை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அதிமுக ஒன்றியச் செயலாளர் விவேகானந்தன், வெள்ளபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமிபூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Puja ,Vellaputhur panchayat ,Madhurantagam ,MLA ,Marakatham Kumaravel ,Achirpakkam ,Chengalpattu district ,
× RELATED ரூ.61.50 மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி அமைக்க பூமிபூஜை