- காஞ்சிபுரம்
- பிட்லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- உவேரிசத்திரம்
- அரக்கோணம் சாலை, காஞ்சிபுரம் மாவட்டம்
- ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், அரக்கோணம் சாலை ஊவேரிசத்திரம் கிராமத்தில் பிடிலீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின், 2024-25ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முழுமை அடைந்து, முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான பொன்.கலையரசன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கலெக்டர் வி.சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட நீதிபதி சாத்தபிள்ளை, ஆர்.கண்ணையன், ஓய்வுபெற்ற ஆசிரியை ரேணுகா, பொறியாளர் வெங்கடேஷ், ஆராய்ச்சியாளர் அரிஸ்டாட்டில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார்.
மேலும், ஆறு குறுந்தகடுகளை வெளியிடப்பட்டது. கல்லூரியின் அனைத்து தகவல்களும் அடங்கிய மாணவர் கையேடு மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் அடங்கிய கையேடும் வெளியிடப்பட்டது. பின்னர், ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் பேசியதாவது: கல்லூரியில் கடந்ந 4 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட உள் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆய்வக வசதி மேம்பாடு ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார். அறக்கட்டளையின் நிறுவனர் வள்ளல் செங்கல்வராய நாயக்கர் உயில்படி, ஏழை, எளிய மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி பயில வேண்டும் என்ற கனவு நினைவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், அவர் மாணவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்றும், ஒழுக்கம் இல்லாத கல்வி எந்த வகையிலும் பயனற்றது என்றும் அறிவுரை கூறி பேசினார். அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் முன்னேறியதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டுதலும் நன்றியும் தெரிவித்தார். இந்நிகழ்வில் முனைவர்கள் ஆர்,சுரேஷ்குமார், நாகராஜ், அறக்கட்டடளை செயலாளர் சாம்பசிவம், துணை முதல்வர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கல்லூரியில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு மூலம் கியூ ஸ்பைடர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் பணி ஆணைகளை வழங்கினார்.
The post முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா: ஒழுக்கம் இல்லாத கல்வி பயனற்றது: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் பேச்சு appeared first on Dinakaran.