- ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- ஹுலுன்பியர்
- சீனா
- கொரியா
- மலேஷியா
- ஜப்பான்
- தின மலர்
ஹூலுன்பியர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. சீனாவில் நடைபெறும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் என 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. இந்தியா தனது முதல் 4 லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா அணிகளை வீழ்த்தி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் முதல் அணியாக அரையிறுதிக்கும் முன்னேறியது. இந்நிலையில், இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தான் 4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிராவுடன் (8 புள்ளி) அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
இதே 8 புள்ளிகளை பெறும் வாய்ப்பில் கொரியா, மலேசியா அணிகளும் உள்ளன. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா தொடர்ச்சியாக 4 வெற்றியை பதிவு செய்துள்ளதுடன் அதிக கோல் அடித்த அணியாகவும் உள்ளது (19 கோல்). பெனால்டி கார்னர் வாய்ப்பில் மட்டுமின்றி ஃபீல்டு கோல் போடுவதிலும் இந்திய வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். அதே சமயம், அகமது புட் தலைமையிலான பாகிஸ்தானும் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அதனால் இந்தியா இன்று கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டி இருக்கும்.
* இரு அணிகளும் 180 முறை மோதியுள்ளதில் பாகிஸ்தான் 82 – 66 என முன்னிலை வகிக்கிறது (32 டிரா).
* ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் 11 முறை மோதியுள்ளதில் இந்தியா 7-2 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (2 டிரா).
* கடைசியாக சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மோதியதில் (2023, செப்.30) இந்தியா 10-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது.
The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.