×

22 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனை; 8 விக் வித்தியாசத்தில் பாக். அதிரடி வெற்றி: தொடரை இழந்தது ஆஸி.

பெர்த்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள பாக். அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கலந்து கொண்டது. ஏற்கனவே நடந்துள்ள இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தன. இந்நிலையில் பெர்த் நகரில் நேற்று 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய ஆஸி வீரர்கள், பாக். பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தனர். 31.5 ஓவரில், ஆஸி. அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன் மட்டுமே எடுத்தது. பாக்.கின் ஷகீன் ஷா அப்ரிடி 3, நசீம் ஷா 3, ஹாரிஸ் ராப் 2, முகமது ஹஸ்னைன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாக். துவக்க வீரர்கள் சயிம் அயுப் 42, அப்துல்லா ஷபீக் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த அதிரடி வீரர் பாபர் அசாம் 28, கேப்டன் முகம்மது ரிஸ்வான் 30 ரன்களை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தனர். பாக். அணி, 26.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது. இதன் மூலம், 2-1 என்ற புள்ளிக் கணக்கில் பாக். அணி தொடரை கைப்பற்றி உள்ளது. ஆஸி. மண்ணில் 22 ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஒரு நாள் தொடரை பாக். வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 22 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனை; 8 விக் வித்தியாசத்தில் பாக். அதிரடி வெற்றி: தொடரை இழந்தது ஆஸி. appeared first on Dinakaran.

Tags : Pak ,Aussies ,Perth ,Pakistan ,Australia ,Dinakaran ,
× RELATED பெர்த்தில் இந்தியா பெற்ற வெற்றி...