- இங்கிலாந்து
- பில் உப்பு
- மேற்கிந்திய தீவுகள்
- டி 20 ஐயில்
- பிரிட்ஜ்டவுன்
- டி 20
- பிரிட்ஜ்டவுன், பார்படாஸ், இங்கிலாந்து
பிரிட்ஜ்டவுன்: டி20 கிரிக்கெட் போட்டிகளில், ஒரே அணிக்கெதிராக, 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் பில் சால்ட் அரங்கேற்றி உள்ளார். பார்படாஸ் தீவில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில், இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கத் துவங்கினர்.
இறுதியில் 19 பந்துகள் மீதமிருக்கையில் 183 ரன் குவித்து வெற்றிக்கனியை பறித்தனர். இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 54 பந்தில் 103 ரன் குவித்து அதகளப்படுத்தினார். அதில், 6 சிக்சர், 9 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம், டி20 போட்டிகளில், ஒரே அணிக்கெதிராக 3 சதங்கள் குவித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை பில் சால்ட் அரங்கேற்றி உள்ளார். கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடந்த டி20 போட்டிகளில், பேக் டு பேக் சதங்களை, அவர் விளாசி உள்ளார்.
The post ஒரே அணிக்கு எதிராக 3 சதம் இங்கிலாந்தின் பில் சால்ட் சாதனை: முதல் டி20யில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி appeared first on Dinakaran.