×
Saravana Stores

தென் ஆப்ரிக்கா போராடி வெற்றி

கெபெரா: இந்தியா உடனான 2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி போராடி வெற்றி பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 4 டி20 போட்டிகளில் மோதுகிறது. கடந்த 8ம் தேதி நடந்த முதல் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், கெபெரா நகரில் நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், ரன் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 4, கேப்டன் சூர்ய குமார் யாதவ் 4 ரன்னில் வீழ்ந்ததால், அணியின் நிலை, 15/3 ரன்களுடன் பரிதாபமாக இருந்தது.

பின் வந்த வீரர்களும் சிறப்பாக ரன் குவிக்கத் தவறினர். அதிகபட்சமாக, ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 39 ரன் எடுத்தார். ஆட்ட இறுதியில் இந்தியா, 6 விக் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. பின்னர் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றது.

The post தென் ஆப்ரிக்கா போராடி வெற்றி appeared first on Dinakaran.

Tags : South Africa ,Gebera ,2nd ,India ,Suryakumar Yadav ,Dinakaran ,
× RELATED இலங்கையுடன் முதல் டெஸ்ட் போட்டி 233...