×

கோப்பையை கைப்பற்றிய கோகோ

ரியாத்: டபிள்யுடிஏ பைனல்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் செங் குய்ன்வென்னை வென்று கோப்பையை கைப்பற்றினார். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், நேற்று முன்தினம் இரவு, நடந்த டபிள்யுடிஏ பைனல்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் கோகோ காப், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சீனாவின் செங் குய்ன்வென் மோதினர்.

போட்டியின் துவக்கத்தில் துடிப்புடன் ஆடிய குய்ன்வென், சிறப்பாக செயல்பட்டு, 6-3 புள்ளிக் கணக்கில் செட்டை கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது சுற்றில் சுதாரித்துக் கொண்ட கோகோ, அதிரடியாக விளையாடி 6-4 புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் இரு வீராங்கனைகளும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போராடினர். இறுதியில் 7-6 புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் கோகோ கைப்பற்றினார். இந்த வெற்றியை அடுத்து போட்டிக்கான கோப்பையும், ரூ. 4 கோடி ரொக்கப்பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.

The post கோப்பையை கைப்பற்றிய கோகோ appeared first on Dinakaran.

Tags : Koko ,RIYADH ,USA ,Coco Cobb ,China ,Cheng Guinwen ,WTA Finals Cup ,Riyadh, Saudi Arabia ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டவருக்கு மரணதண்டனை: சவுதி...