- குண்டாசி
- சேலம்
- ஜீவானந்தம்
- தம்மநாயக்கன்பட்டி
- தோட்டிபரை கருப்பசாமி கோயில்
- கொண்டலாம்பட்டி
- இன்ஸ்பெக்டர்
- பாபு
- சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு
சேலம், செப்.4: சேலம் அருகே தம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காவேரி மகன் ஜீவானந்தம்(27). இவர், கடந்த மாதம் 10ம் தேதி கொண்டலாம்பட்டி தோட்டிப்பாறை கருப்பசாமி கோயில் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது ஜீவானந்தத்திடம் இருந்து 2.700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஜீவானந்தத்தை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர். தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ஜீவானந்தத்தை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு எஸ்பி மயில்வாகணன் மூலம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபுவிற்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்ற கமிஷனர், குண்டர் தடுப்பு காவலில் ஜீவானந்தத்தை சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.
The post கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.