சேலம், ஆக.26: தொடர் விடுமுறை என்பதால், சேலம் அரசு பொருட்காட்சியைக் காண ஏராளாமான பொதுமக்கள் குவிந்ததால் நேற்று கூட்டம் அலைமோதியது. சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில், அரசு பொருட்காட்சி கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கூட்டுறவுத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட 32 அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், விளையாட்டு உபகரணங்கள், ராட்டினங்கள் உள்ளது.
இந்த அரங்குகள் முன் அமைக்கப்பட்டுள்ள கவுன்டரில் டிக்கெட் வாங்கி பொழுது போக்கு அம்சங்களில் விளையாடி மகிழ்ந்தனர். சனி, ஞாயிறு, கோகுலாஷ்டமி என மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. ேமலும், பொதுமக்கள் அங்கிருந்த உணவுக்கடைகளில் குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
The post அரசு பொருட்காட்சியில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.