- சுதந்திர தினம்
- காஞ்சிபுரம்
- பிரதேச
- தபால் கண்காணிப்பாளர்
- அருள்தாஸ்
- பிரிவு அஞ்சல் கண்காணிப்பாளர்
- காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுதந்திர தினத்தையொட்டி அனைத்து தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது என்று கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில், இனி தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதனை, பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். தபால் நிலையங்களுக்கு செல்லாமல், https:/www.epostoffice.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே தேசியக்கொடியை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வரும் ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கும் அனைத்து தபால் நிலையங்களிலும் 2 ரூபாய்க்கு மத்திய, மாநில அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில், தங்கள் பணியாளர்களுக்கு வழங்க போதுமான அளவுக்கு மொத்தமாக தபால் நிலையங்களில் தேசியக்கொடியை வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post சுதந்திர தினத்தையொட்டி தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை appeared first on Dinakaran.