×
Saravana Stores

பள்ளிப்பட்டு அருகே உள்ள 25 அடி உயர எல்லையம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம்: பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே உள்ள எல்லையம்மன் கோயிலில் உள்ள வளாகத்தில் 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட எல்லையம்மன் சிலைக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி நல்ல தண்ணீர் குளம் கரைப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எல்லையம்மனுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில். கோயில் வளாகத்தில் 25 அடி உயரத்தில் எல்லையம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம குண்ட பூஜைகள் நடந்தது.

இதனை அடுத்து, காலை 9 மணி அளவில் எல்லை அம்மன் சிலைக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரால் கும்பாபிஷேகம் நடத்தி மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. அப்போது கோயில் முன்பு கூடி இருந்த ஏராளமான பெண்கள் அம்மனை தரிசித்து வழிபட்டினர். இதனை தொடர்ந்து, மூலவர் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் என்னப்பா ராஜு குடும்பத்தினர் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post பள்ளிப்பட்டு அருகே உள்ள 25 அடி உயர எல்லையம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம்: பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kumbapishekam ,Sami ,Thiruthani ,Kumbapisheka ceremony ,Endyamman ,Enderyamman Temple ,Frontyamman ,Nochili ,Kumbabishekam ,Enlayaman ,
× RELATED கந்தசஷ்டி 4ம் நாள் திருத்தணி முருகனுக்கு திருவாபரண அலங்காரம்