- உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ
- Prayagraj
- சமாஜ்வாடி
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜவஹர் யாதவ்
- பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம்
- BJP MLA
- உதய்பன் கர்வாரியா
- கபிலமுனி
- சூரஜ்பன்
- உத்திரப்பிரதேசம்
பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 1996ம் ஆண்டு சமாஜ்வாடி எம்எல்ஏ ஜவஹர் யாதவ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஜ முன்னாள் எம்எல்ஏ உதய்பன் கர்வாரியா மற்றும் அவரது சகோதரர்கள் கபில்முனி மற்றும் சூரஜ்பன் ஆகியோர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி உதய்பன் கர்வாரியாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவரது நன்நடத்தையை கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே விடுவிக்க சிறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கர்வாரியாவை முன்கூட்டியே விடுவிப்பதற்கு ஆளுநர் ஆனந்திபென் கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்ற நிலையில் நேற்று சிறையில் இருந்து உதய்பன் கர்வாரியா விடுதலை செய்யப்பட்டார்.
The post உத்தரபிரதேச மாஜி பாஜ எம்எல்ஏ விடுதலை appeared first on Dinakaran.