×

நாம் ஒன்றிணைந்தால் பல பிரச்னைகள் தீரும்: சார்க் நாடுகளுக்கு வங்கதேச ஆலோசகர் அழைப்பு

டக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் அரசின் தலைமை ஆலோசகர் யூனுஸ் அளித்த பேட்டியில், ‘‘இந்த மாத இறுதியில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு இடையே இந்திய பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன். சார்க் நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்து புகைப்படம் எடுக்கவும் நான் முயற்சி செய்வேன். தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கமான சார்க் ஒரு பெரிய நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. அது இப்போது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.

சார்க் அமைப்பு செயல்படவில்லை. சார்க் என்ற பெயரை நாம் மறந்துவிட்டோம். சார்க் அமைப்பின் உணர்வை உயிர்பிக்க முயற்சிக்கிறேன். சார்க் மாநாடு நீண்ட காலமாக நடைபெறவில்லை. நாம் ஒன்றுபட்டால் நிறைய பிரச்னைகள் தீரும்” என்று தெரிவித்தார். 79வது ஐநா பொதுச்சபை கூட்டம் இந்த மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகின்றது. ஐநா வெளியிட்ட அறிக்கையில், வருகிற 26ம் தேதி ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post நாம் ஒன்றிணைந்தால் பல பிரச்னைகள் தீரும்: சார்க் நாடுகளுக்கு வங்கதேச ஆலோசகர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,SAARC ,Dhaka ,Yunus ,Modi ,UN General Assembly ,Dinakaran ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...