சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: எப்போதும் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் களம் இறங்கி மக்களுக்காக போராடும் ஒரு கட்சியாக என்றைக்கும் தேமுதிக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம். அதேபோல் ரேஷன் கடையில் பாமாயில், பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியான முறையில் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நமது உரிமையான தண்ணீரை பெற்று தர வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சியுடன் பேசி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post காவிரி நீர் பெற்றுத்தர நடவடிக்கை: பிரேமலதா வேண்டுகோள் appeared first on Dinakaran.