×

சுற்றுச்சூழல் வரைவு சட்டத்திருத்தம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் ஆபத்து: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத்திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டுள்ளது. மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒன்றிய அரசு அதிகாரி இடம்பெறுவது மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதாகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப் போகச்செய்யும், மாநில உரிமைகளைப் பறிக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இத்தகைய சட்ட வரைவுகளை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.

The post சுற்றுச்சூழல் வரைவு சட்டத்திருத்தம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் ஆபத்து: எஸ்.டி.பி.ஐ. கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,SDBI Party ,Nella Mubarak ,Union Ministry of Environment, Forestry and Climate Change ,State Pollution Control Board ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...