×

விஜய் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம்


புதுடெல்லி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கட்சிக் கொடியையும், கொடிக்கான பாடலையும் அறிமுகம் செய்து வைத்து விஜய் பேசினார். கட்சிக்கு அங்கீகாரம் கோரி, கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post விஜய் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commission ,Vijay ,New Delhi ,Chief Election Commission of India ,Tamil Nadu ,Victory Kazhagam ,Tamilnadu Vetri Kazhagam ,Chennai ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...