×

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப் பறிப்பதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: காற்று மற்றும் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத் திருத்தத்தை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக மாநிலத்தின் அதிகார வரம்பை ஒன்றிய அரசு துண்டித்துள்ளது.

சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் சட்டங்கள்கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இந்தச் சட்ட வரைவுகளை எதிர்த்து ஒன்றிய அரசிடம் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும்.

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப் பறிப்பதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : government ,Jawahirullah ,Chennai ,President of ,Humanity People's Party ,Prof. ,MH Jawahirullah ,Union Ministry of Environment Forest and Climate Change ,Jawaharlal ,
× RELATED மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர்...