×

தமிழ்நாட்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: திருச்சி சிவா கோரிக்கை

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசிடமே வழங்க வேண்டும் என திருச்சி சிவா எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். 2024-25-க்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து 7-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு மாநிலத்தலைவர்களும் அரசியல் கட்சியினரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் தென்மாநில மக்களுக்கு இந்த பட்ஜெட் வேதனையையும், வருத்தத்தையும் அளித்துள்ளது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஏகலைவன் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் குறித்து பேசினார். அதில்,

ஏகலைவன் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்- கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசிடமே வழங்க வேண்டும் என திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை வைத்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ஏகலைவன் பள்ளி ஆசிரியர் நியமன முறை மாற்றத்தை எதிர்த்து பேசினார். அண்மைக்காலம் வரை ஏகலைவன் பள்ளிகளின் ஆசிரியர்களும் இதர ஊழியர்களும் தமிழ்நாடு அரசால் நியமிக்கபட்டு வந்தனர். எனினும் தற்போது பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் என்ற அமைப்பை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி உள்ளது. ஏகலைவன் பள்ளி ஆசிரியர்களும், இதர ஊழியர்களும் தேசிய அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவதாகவும் திருச்சி சிவா புகார் தெரிவித்துள்ளார்.

பழங்குடியினரின் மொழி தெரியாத ஆசிரியர்கள்

தேசிய அமைப்பால் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பழங்குடி மக்கள், மாணவர்களின் மொழிகள் தெரிவதில்லை. நாடு முழுவதும் உள்ள 400 ஏகலைவன் பள்ளிகளில் 38,000 ஆசிரியர்கள், முதல்வர்கள், இதர ஊழியர்கள் நியமிக்கப்பட இதுவரை 303 பள்ளி முதல்வர்களும் 707 இளநிலை செயலக உதவியாளர்களும் ஏகலைவ பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்து தென் மாநிலங்களில் உள்ள ஏகலைவ பள்ளிகளில் நியமித்துள்ளனர். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடி மக்கள், மாணவர்களின் வட்டார மொழிகள் தெரியவில்லை. மொழி தெரியாத வடமாநிலத்தவர்களால் தமிழ்நாட்டு பழங்குடி மாணவர்களுடன் பேசுவதற்கே முடியாத நிலை உள்ளது.

 

The post தமிழ்நாட்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: திருச்சி சிவா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ekalaivan ,Tamil Nadu ,Trichy Siva ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Government ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...