×

உதய் மின் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை: தங்கமணி அறிக்கை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைத்த நன்மைகளில் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். அன்றைய காலக்கட்டத்தில் மின் பகிர்மான கழகங்களின் கடன் மற்றும் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும், உதய் திட்டத்தில் சேருவதால் அதிக வட்டிக்கான கடனை திரும்ப செலுத்தி, நிதி இழப்பை குறைப்பதற்கான வாய்ப்பை கருத்தில் கொண்டும், ஒன்றிய அரசிடம் இருந்து தடையின்றி போதுமான நிலக்கரி பெற வேண்டியதை கருத்தில் கொண்டும், ஒன்றிய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்தவும் முடிவு செய்து, உதய் திட்டத்தை கடந்த 2017 ஜனவரி மாதம் முதல் செயல்படுத்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இத்திட்டத்தின் மூலம் நிலுவையில் இருக்கும் ரூ.30,420 கோடி மின் பகிர்மான கழகத்தின் கடன் தொகையை, ரூ.22,815 கோடி மாநில அரசு எடுத்துக் கொண்டு அந்த தொகையை கடன் பத்திரம் மூலம் நிதி திரட்டி மின்பகிர்மான கழகத்திற்கு வழங்கியது. அரசு வழங்கிய ரூ.22,815 கோடியும், 2017-2018ல் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2021-2022 வரை, ஆண்டுக்கு ரூ.4,563 கோடி வீதம் இந்த கடன் தொகை மானியமாக மாற்றப்பட்டது. உதய் திட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டதால்தான், மின்பகிர்மான கழகத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டது. உதய் மின் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சத்தின்படி, இந்த உதவிகளுக்கு பிறகும் மின் பகிர்மான கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டால், அந்த இழப்பில் 50 சதவீதம் வரை மாநில அரசு ஈடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இன்றைய அளவில் மின்பகிர்மான கழகம் உயிர்ப்போடு செயல்படுவதற்கு காரணம் இந்த உதய் திட்டம்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உதய் மின் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை: தங்கமணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Former ,Minister ,Adimuka ,Tamil Nadu Electricity Board ,Tamil Nadu ,
× RELATED காவிரியில் இருந்து அதிக திறன் கொண்ட...