×

அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் உபரிநீர் திறப்பு

 

உடுமலை, ஜூலை 24: அமராவதி அணையில் இருந்து நேற்று பிரதான கால்வாயில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன்பு மேல் மதகு வழியாக ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. 6வது நாளாக நேற்றும் உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

90 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று காலை நீர்மட்டம் 89.11 அடியாக இருந்தது. அணைக்கு 1,444 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 1,472 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அமராவதி அணையின் பிரதான கால்வாயில் நேற்று மதியம் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் பிரதான கால்வாய் பகுதியில் சுமார் 25,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் உபரிநீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Amaravati Dam ,Udumalai ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையில் மழை; அமராவதி...