×

ஒன்றிய அரசுக்கு எதிராக திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 

திருப்பூர், ஜூலை 23: ஒன்றிய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்ட தொடரில் முன் மொழியப்பட்ட திருத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள் கடந்த 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஒன்றிய அரசு, வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை ஏற்று கொள்ளாததால் நேற்றைய தினம் முதல் மீண்டும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் அசோசியேசன் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் சுமார் 700 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் நடைபெறுகின்ற தேசிய அளவிலான போராட்டத்திலும் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

The post ஒன்றிய அரசுக்கு எதிராக திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Union Govt. Tirupur ,Union Government ,Dinakaran ,
× RELATED விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.23.85 லட்சம் நிதியுதவி