×

பாக்.கில் 2021ம் ஆண்டு மாயமான இந்து சிறுமி: கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் போராட்டம்

கராச்சி: பாகிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு மாயமான தனது 7 வயது மகளை கண்டு பிடித்து தரக்கோரி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுக்குர் நகர் அருகே உள்ள சங்ரார் பகுதியில் வசித்து வந்தவர் இந்துவான ராஜ்குமார் பால் மற்றும் அவரது மனைவி வீனா குமாரி. இருவரும் நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள பிரபல டீன் தல்வார் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி இவர்களது வீட்டின் அருகே மொகரம் ஊர்வலம் சென்றுள்ளது. 7வயதான இவர்களது மகள் பிரியா குமாி சர்பத் வழங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென சிறுமி மாயமாகி உள்ளார்.

அவரை கண்டுபிடித்து தரக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக காவல்துறையிடம் புகாரளித்தும் முறையிட்டும் வருகின்றனர். எனினும் அவர்களது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் டீன் தல்வாரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ஜியா லங்க்ரூவ், ஐஜி ஜாவீத் ஓத்ஹோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ராஜ்குமார் மற்றும் வீனா குமாரியை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மாயமான அவர்களது மகளை கண்டுபிடித்து தருவதாக அவர்களுக்கு உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து இருவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

The post பாக்.கில் 2021ம் ஆண்டு மாயமான இந்து சிறுமி: கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Karachi ,Rajkumar Pal ,Sangrar ,Sukkur Nagar ,Sindh ,
× RELATED பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் தரம் படு மோசம்: வாசிம் அக்ரம் காட்டம்