×

மர்மமான முறையில் நள்ளிரவில் தீப்பற்றி எரியும் வீடுகள் கிராம மக்கள் பீதி

வடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே மர்மமான முறையில் இரவு நேரத்தில் தீப்பற்றி எரியும் வீடுகள் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட கல்குணம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.கடந்த 2015ம் ஆண்டு பெரு வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமத்தில் கல்குணம் கிராமமும் ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக இப்பகுதியில் உள்ள வீடுகள் இரவு நேரங்களில் திடீர் திடீரென பற்றி எரிகிறது மர்ம நபர் யாரோ ஒருவர் வீடுகளை கொளுத்தி செல்வதாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த மே மாதம் 24 ஆம் தேதி சிவக்குமார் என்பவரது வீடு முதலில் எரிந்துள்ளது.இரண்டு நாள் கழித்து சக்திவேல் என்பவர் வீடு இரவு 11 மணி அளவில் எரிந்தது.இதையடுத்து ஜூன் மாதம் 24 ஆம் தேதி புகழ் உத்திராபதி,ஜூலை மாதம் 12ஆம் தேதி தேவநாயகி,19ஆம் தேதி வைரக்கண்ணு என்பவர்களின் வீடுகள் தீப்பற்றி எரிந்தது.

மேலும் வீடுகள் மட்டுமல்லாமல் மாடுகளுக்கு தீவனத்திற்காக வைத்திருந்த ரமேஷ், வைத்தி, சரவணகுமார் ஆகியோர்களின் வைக்கோல் போர்களும் எரிந்தது..இப்படியாக கடந்த இரண்டு மாத காலமாக மர்மமான முறையில் வீடுகள் தீப்பற்றி எரிந்து வரும் சம்பவம் கிராம மக்களிடையே பீதியை, அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் இரவு வேளையில் தூக்கத்தை விட்டு விட்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் காவல்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்களை மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். இப்பகுதியில் இதுவரை ஐந்து வீடுகளும் மூன்று வைக்கோல் போர்களும் தீயீட்டு கொளுத்தப்பட்டிருப்பதால் அடுத்து யார் வீடு எரியப் போகிறதோ என்ற பதட்டத்தில் பீதியிலும்,அச்சத்திலும் அப்பகுதி கிராம மக்கள் இருந்து வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்: வீட்டை இழந்து நாங்கள் பிள்ளைகளை வைத்து மிகவும் கஷ்டப்படுகிறோம் ஏற்கனவே கல்குணம் கிராமத்தில் இயற்கை சீற்றத்தின் அழிவுகள் எங்களை விட்டு வைக்கவில்லை. தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டை மர்ம நபர்களால் குறி வைத்து அசந்து தூங்குகின்ற நேரத்தில் வீட்டை கொளுத்தி விட்டு செல்கின்றனர் இன்னும் எத்தனை வீடுகள் எரியப் போகிறது என்று தெரியவில்லை என தினம் தினம் உறக்கத்தை இழந்தும் வேலை வாய்ப்புகளை இழந்தும் வருமானம் இன்றி வேதனைப்பட்டு வருகின்றோம்.

இதுவரை உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை ஏதோ எங்கள் கிராமத்தை கடவுள் காப்பாற்றுகிறார் போல ஆகையால் மேலும் வீடுகள் தீப்பற்றி எரியாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக வீட்டை கொளுத்தி விட்டு செல்லும் மர்ம நபரை அடையாளம் கண்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இதுபோன்று மற்ற வீடுகளையும் பாதுகாக்க தமிழக அரசு சிசிடிவி கேமராவை பொருத்தி மர்ம நபர்களை கண்காணிக்க வேண்டும் எனவும். மேலும் மர்ம நபரை கண்டுபிடிக்கும் வரை எங்கள் ஊரிலே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனக் கூறினர்

The post மர்மமான முறையில் நள்ளிரவில் தீப்பற்றி எரியும் வீடுகள் கிராம மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Kurinchipadi ,Kalgunam ,Cuddalore district ,
× RELATED விமான சேவை தொடங்குவது எப்போது?