×
Saravana Stores

லாரி அதிபர் திடீர் மாயம்

சேலம், ஜூலை 21: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் தங்காயூர் கிராமம் மலையனூரை சேர்ந்தவர் பச்சமுத்து (45), சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை திருவேங்கடம். அவரது பெயரில் உள்ள 35 சென்ட் பூர்வீக சொத்தை தனக்கு பிரித்து தர வேண்டும் என கடந்த 16ம் தேதி மதியம் பச்சமுத்து கேட்டுள்ளார். அதற்கு சொத்தை பிரித்து தர முடியாது என தந்தை திருவேங்கடம் தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில், வீட்டில் தனது செல்போனை வைத்து விட்டு லாரி அதிபர் பச்சமுத்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மனைவி கற்பகம் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கும் காணவில்லை. இதனால் கொங்கணாபுரம் போலீசில் கற்பகம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான லாரி அதிபர் பச்சமுத்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post லாரி அதிபர் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Larry Chancellor ,Salem ,Pachamuthu ,Malayanur ,Thangayur ,Konganapuram ,Eadpadi, Salem district ,Thiruvenkadam ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...