×

பழுதுடைய ஸ்கூட்டரை வழங்கியதற்கு ₹1.94 லட்சம் இழப்பீடு வழங்க ஓலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பழுதுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கியதாக நிஷாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ₹1.94 லட்சம் வழங்குமாறு OLA நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 டிசம்பரில் வாங்கிய ஸ்கூட்டரின் பாகங்கள் இயங்காததாக நிஷாத் ஷோரூமில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்கூட்டருக்கான விலையை (₹1.62 லட்சம்) 6% வட்டியுடனும், வழக்கு செலவுக்கு ₹10,000, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு ₹20,000மும் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

The post பழுதுடைய ஸ்கூட்டரை வழங்கியதற்கு ₹1.94 லட்சம் இழப்பீடு வழங்க ஓலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ola ,BENGALURU ,Nishad ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கில்...