×

தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கில் பெங்களூரு ஏர்போர்ட்டில் முக்கிய குற்றவாளி கைது

பெங்களூரு: என்ஐஏ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கில் ஜலீல் அஜீஸ் அகமது (எ) அஜீஸ் அகமது என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்தோம். தீவிரவாதிகள் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படைவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டும் மற்றும் உலகத்தை இஸ்லாமியமயமாக்குதல் மற்றும் இஸ்லாமிய சட்டத்தை நிறுவுதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்திருந்தது.

இதில் ஹிஸ்புத் தஹ்ரீரின் நிறுவனர் தகி அல்-தின் அல்-நபானி எழுதிய அரசியலமைப்பை இந்தியாவில் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல இளைஞர்களை ஒன்று திரட்டி, அவர்களின் மனதில் ஹிஸ்புத் தஹ்ரீரின் சித்தாந்தங்களைப் புகுத்துவதற்காக முகாம்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதுபோன்ற ரகசிய அறிக்கைகளை ஏற்பாடு செய்ததில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களில் அஜீஸ் அகமதுவும் ஒருவர்என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கில் பெங்களூரு ஏர்போர்ட்டில் முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Hizb ut Tahrir ,Bengaluru airport ,Bengaluru ,NIA ,Jalil Aziz Ahmed (A) Aziz Ahmed ,Nadu Hizbud Tahrir ,Bengaluru International Airport ,Hizbud Tahrir ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை...