×

கார்ப்பரேட் நிறுவனங்களை விட தனிநபரிடம் அதிகளவு வருமான வரி வசூல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெருநிறுவனங்களை விட தனிநபர்களிடம் அதிகளவில் வருமான வரி வசூலிக்கப்படுதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.  இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுசெயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஜூலை 23ம் தேதி ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2024 ஏப்ரல் 1 முதல் ஜூலை 1 வரையிலான காலகட்டத்தில் மொத்த தனிநபர் வருமான வரி வசூல் ரூ.3.61 லட்சம் கோடியாகவும், மொத்த பெருநிறுவனங்களின் வரி வசூல் ரூ.2.65 லட்சம் கோடியாகவும் இருந்தததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தரவுகள் மூலம் நிறுவனங்களை விட தனிநபர் அதிக வருமான வரி செலுத்துகின்றனர் என காங்கிரஸ் கூறி வந்தது மீண்டும் உறுதியாகி உள்ளது. மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகும்போது, மொத்த வரி வசூலில் தனிநபர் வருமான வரி 21 சதவீதமாகவும், மொத்த பெருநிறுவன வரி வசூல் 35 சதவீதமாகவும் இருந்தது.

ஆனால் தற்போது மொத்த வருமான வரியில் பெருநிறுவனங்களின் வரி கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைந்து 26 சதவீதமாக உள்ளது. அதேசமயம் தனிநபர் வருமான வரியின் பங்கு 28 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்பு கோடீஸ்வரரர்களின் பாக்கெட்டுகளில் ரூ.2 லட்சம் கோடியை சேர்த்துள்ளது. அதேசமயம் நடுத்தர வர்க்கத்தினரின் வரிசுமையை அதிகரித்துள்ளது” என்று கூறி உள்ளார்.

The post கார்ப்பரேட் நிறுவனங்களை விட தனிநபரிடம் அதிகளவு வருமான வரி வசூல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,General Secretary ,Communications Officer ,Jairam Ramesh ,Twitter ,
× RELATED கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய...