×

‘இதுதாங்க மோடியின் குஜராத் மாடல்’ 18 காலிபணியிடத்துக்கு திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள்: தள்ளுமுள்ளுவால் ஓட்டலின் கைப்பிடி கம்பிகள் உடைந்தன

பரூச்: நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் உள்ள ஓட்டலில் தெர்மாக்ஸ் என்று தனியார் நிறுவனம் தனது தொழிற்சாலையில் காலியாக உள்ள 18 பணி யிடத்துக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு குவிந்தனர். ஓட்டல் இருக்கும் பகுதி முழுவதும் இளைஞர்கள் திரண்டனர். அங்கு முண்டியடித்து அவர்கள் செல்ல முயன்றதில் ஓட்டலுக்குள் செல்வதற்காக வைக்கப்பட்டு இருந்த கைப்பிடி சுற்றுச்சுவர் கம்பி இடிந்து பெரும் களேபரம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் வெளியிட்டு,’ இதுதான் மோடியின் குஜராத் மாடல். குஜராத் மாநிலம் பரூச்சில் ஓட்டல் வேலைக்காக ஏராளமான வேலையில்லாதவர்கள் திரண்டனர். ஓட்டலின் முன்பகுதி உடைந்து குஜராத் மாடல் அம்பலமாகும் சூழல் உருவானது. மோடி இந்த வேலையின்மை மாதிரியை நாடு முழுவதும் திணிக்கிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

The post ‘இதுதாங்க மோடியின் குஜராத் மாடல்’ 18 காலிபணியிடத்துக்கு திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள்: தள்ளுமுள்ளுவால் ஓட்டலின் கைப்பிடி கம்பிகள் உடைந்தன appeared first on Dinakaran.

Tags : Modi ,Gujarat ,Baruch ,Congress ,Thermax ,
× RELATED நீர் சேமிப்பு என்பது ஒரு முயற்சி நீர்,...